MCX Stock Exchange - Logo
 
MCX Stock Exchange MCX Stock Exchange MCX Stock Exchange
 
 
NISM Certification
MCX-SX on Twitter

Corporate Tweets

Currency Tweets

 
பொதுநோக்கு RSS FeedsBookmarkEmailPrint

இந்தியாவின் புதிய பங்குச் சந்தை, எம்சிஎக்ஸ் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் லிட் (எம்சிஎக்ஸ்-எஸ்எக்ஸ்), உலகத்தின் தலைசிறந்த உயர் தொழில்நுட்பத்திறன் கொண்ட புதிய தலைமுறை பங்குச் சந்தைகள் எதிர்காலத்தில் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. அதிநவீன தொழில்நுட்பம், உலகத் தரம் வாய்ந்த பணிச்சேவைகள் இவற்றுடன் செலவினங்களைக் கண்காணித்து, இந்திய நிதிச் சந்தைகளின் தோற்றத்தையே மாற்றியமைத்திருக்கிறது எம்சிஎக்ஸ்-எஸ்எக்ஸ்.

ஆரம்பிக்கப்பட்ட ஒராண்டிற்குள்ளாகவே திட்டமிட்டுச் செயல்படும் தலைமைத் திறமையையும் புதியன படைக்கும் தகுதியையும் நிரூபித்திருக்கிறது எம்சிஎக்ஸ்-எஸ்எக்ஸ். சந்தையை வளப்படுத்தும் வளர்ச்சியில் முனைப்புடன் செயல்பட்டு புதுப் பணிச்சேவைகளை அறிமுகப் படுத்தி முன்னோடியாக நிற்கிறது. சந்தையை முறைப்படுத்தும் செக்யூரிடீஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் போர்ட் ஆஃப் இந்தியா அங்கீகரித்திருக்கும் எம்சிஎக்ஸ்-எஸ்எக்ஸ், 600- க்கும் அதிகமான அங்கத்தினர்களுடன் இந்திய நாட்டில் பரவியிருக்கும் 486 பெருநகரங்களிலும், நகரங்களிலும் வர்த்தக டெர்மினல்களை நிறுவி தன் ஒப்பற்றச் சேவையை அளித்து வருகிறது.

முதலீட்டார்களின் பாதுகாப்பிற்கும், முறைப்படுத்தும் அதிகாரத்தின் விதிகளை அனுசரிப்பதற்கும் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடனும் எம்சிஎக்ஸ்-எஸ்எக்ஸ், உலகத் தரத்தின் தலை சிறந்த செயல்முறைகளைக் கடைபிடித்து வருகிறது. இதனால், இறக்குமதியாளர்கள், ஏற்றுமதியாளர்கள், முதலீட்டார்கள், நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் தங்கள் கரன்சி ரிஸ்க்குகளை மிகவும் வெளிப்படையாகவும் பாதுகாப்புடனும் நஷ்டத்தடை பேரத்தின் வழியாகப் பாதுகாத்துக் கொள்ள வழிசெய்து கொடுத்திருக்கிறது. இத்துடன், தன்னுடைய கிளியரிங் கார்ப்பொரேஷன் (எம்சிஎக்ஸ்-எஸ்எக்ஸ் கிளியரிங் கார்ப்பொரேஷன் லிட்.) சேவைகள் மூலம் செய்யப் பட்டிருக்கும் எல்லா பரிவர்த்தனைகளுக்கானச் செட்டில்மெண்ட்களுக்காகவும் பொறுப்புறுதி கொடுப்பதால், எதிர்பார்ட்டி அபாயங்களையும் கலைத்து மேம்பட்ட பாதுகாப்பு கிடைக்கும்படி செய்கிறது.

”செய்திகளைப் பகிர்ந்து கொள்ளுதல், புதியன முயற்சித்தல், கற்பித்தல் அதனுடன் ஆராய்ச்சிகளையும் மேற்கொள்ளுதல் போன்ற ஏற்பாடுகள்தான் சந்தையைப் படிப்படியாக வளர்க்கும்” என்று எம்சிஎக்ஸ்-எஸ்எக்ஸ் உறுதுயாக நம்புகிறது. நாடெங்கிலும் பரவியிருக்கும் மின்னணு வர்த்தகத் தளத்தை முழுமையாகவும் தங்களுக்குப் பயனளிக்கும் விதத்தில் சந்தையில் பங்குகொள்பவர்கள் உபயோகிப்பதற்கு ஊக்கமளிப்பதை எம்சிஎக்ஸ்-எஸ்எக்ஸ் தனது தலையாயப் பணியாகக் கொண்டிருக்கிறது. முன்னோடி வளர்ச்சிப் பணிகளைத் தொடங்கி, நாட்டின் பெருமைவாய்ந்த தொழில்துறை மற்றும் வர்த்தக அமைப்புகள், கல்வி நிலையங்களுடன் கைகோர்த்து நிதித்துறை விழிப்புணர்வு முகாம்களின் வழியே நிதித்துறைப் பாடங்களும் சொத்துக்களைப் பராமரிக்கும் வாழ்க்கை முறைகளையும் எம்சிஎக்ஸ்-எஸ்எக்ஸ் கற்பித்து வருகிறது.

செக்யூரிடீஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் போர்ட் ஆஃப் இந்தியா (செபி) மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) முறைப்படுத்தும் அதிகாரத்தின் கீழ் எம்சிஎக்ஸ்-எஸ்எக்ஸ், கரன்சி ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்தை அமைத்து அதில், நாடுமுழுக்க பரவியிருக்கும் மின்னணு தளத்தில் கரன்சி டிரைவேடிவ் பிரிவாக வழங்கி வருகிறது.

 
         
 
>